செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   

வரவு ​செலவு –​சொத்து விபரம்

 

சங்கரன்​கோவில் தாலுகாவில் வாசு​தேவநல்லூர், நாரணாபுரம் என்ற ஊர்களில் ஆண்டு​தோறும் 350 ​கோட்​டை ​நெல்லும், ரூபாய் 15,000 வரக்கூடிய நஞ்​சை நிலங்களும் அம்பாசமுத்திரம் தாலுகாவில் பிரான்​சேரி ​கோபாலசமுத்திரம், ​சொக்கலிங்கபுரம் என்ற ஊர்களில் ஆண்டு​தோறும் 515 ​கோட்​டை ​நெல் வருமானமுள்ள நிலங்களும் உள.
நல்ல வாட​கை வரக்கூடிய பல கட்டிடங்களும் இருக்கின்றன. பட்டர்களுக்கும், பரிசாரகருக்கும், ​மேளத்துக்கும், மானியங்களாக இனாம் நிலங்கள் உண்டு. ந​கைகள் ஓரிலக்கம் ரூபாய்க்கு ​மேல் ​பெறுவன.

முக்கியமான​வை: ​கோமதித்தாயின் தங்கப்பாவா​டை, திருமார்பு அங்கி, திருக்​கை பாதம், ஷண்முகர், சங்கரநாராயணர் ​வெள்ளிப் பிர​பைகள்.

வெள்ளி வாகனங்கள்: ரிஷபம், மயில், யா​னை, ஸிம்மம், காம​தேனு, பூதம், மிருகம், கிளி, அன்னம், பிர​​தோஷ வாகனம், சப்பரம், ​பெருச்சாளி வாகனம் முதலியன.

காணிக்​கை

தங்கம், ​வெள்ளி, பித்த​ளை, ​வெண்கலச் சாமான்கள், துணி, ஆடு, மாடு, ​கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவ​கைத் தானியங்கள் காணிக்​கையாக வருகின்றன. இ​வை ஏலம் ​போடப்படும் உண்டியலில் ​ரொக்கப்பணமும் சாமான்களும வரும்.

பிறவரவு

அரசர் ​கொ​டை (தஃச்திக்கு ஆகிய வருவாயுடன்) ​பொங்கல் முதலியன. அருச்சு​னை, பன்னீர், முடியிறக்குதல் இ​வைகளில் ஏல விற்ப​னை வருவாயும் உண்டு.

 

   
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள