செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   

திருப்பணிகள், வர்ண​வே​லைகள், விமானங்கள்

 

சங்கரனார் திருக்​கோவில் இன்று நாம் காணும் சிறந்த திருக்​கோலத்​தை அ​டையச் ​செய்தவர் காலஞ்​சென்ற தரும கர்த்தர் திருவாளர் N.A.V.​சோமசுந்தரம்பிள்​ளை பி.ஏ.,பி.எல்., அவர்கள். சங்கரநாராயணர் திரு முன்புள்ள ​பெரிய மண்டபமும், அம்பலம், நடராசப் ​பெருமான் திருக்​கோவிலும், ஆறுமுகநயினார் ​கோவிற் ​கோபுரமும், நாகசு​னை முன் மண்டபமும், அங்கூர் விநாயகர் ​கோவிற் ​கோபுரமும், ​மே​லை வாசல் முன் மண்டபமும் கட்டிய​தோடு சங்கரனாuர் ​கோவிலின் உட்சுற்றுத் தவிர ஏ​னைய இடங்களி​லெல்லாம் தளவரி​சைக்கல் பரப்பிய​மைத்தார்கள்.

இப்​போதுள்ள ​கோவில் அலுவல் நி​லையமும் அவர்களா​லே​யே கட்டப்​பெற்றது. நந்தவனக் கிணறும் பசுக்களுக்​கேற்ற ​தொழுவமும் அ​மைத்தவர்கள் அவர்க​ளே, நான்கு திருமதில்களிலும் ​மேற்பூச்சுப் பூசி அ​வைகளின் நான்கு மூ​லைகளிலும் காவல் உருவங்கள் ​செய்து ​வைத்த​தோடு சங்கரலிங்கப் ​பெருமான் திருக்​கோவில், ​கோமதியம்​மை திருக்​கோவில் முன் மண்டபங்களிலும் ச’ங்கரநாராயணர் ​கோவிலிலும் அதன் முன் மண்டபத்திலும் அழகான வர்ண ​வே​லைகள் ​செய்தும் ஓவியங்கள் எழுதியும் ​வைத்தார்கள். அவர்கள் ​செய்தனவும் ​செய்ய எண்ணியனவுமான திருப்பணிகள் அளவில்லாதன.

ப​ழைய காலத்தி​லே ​கோமதியம்​மை ​கோவிலி​லே சித்திரச் சா​லை​​யொன்று இருந்ததாகவும், அதிற் ​கோமதியம்​மை தவநி​லை சங்கரனார் அம்​மைக்கும் சங்கரபதுமருக்கும் காட்சியருளிய நி​லை, ஊரும் ​கோவிலும், அகத்திய முனிவருக்கு ஐந்​தெழுத்தின் உண்​மை நி​லை உ​ரைத்தது இ​வை எழுதக் ​பெற்றிருந்ததாகவும் சங்கரலிங்கர் உலா விவரிக்கின்றது.

 

   
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள