செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   
கல்வெட்டு சிறப்பு
 

1473 – 74ல் பட்டம் பெற்ற பராக்கிரம பாண்டியனாருடைய கல்வெட்டு சங்கரநயினார் கோவிலில் 1506-07ல் எழுதப் பெற்றிருக்கிறது. அதில் அவருடைய ஆளுகையின் 33-வது ஆண்டென்பது தெரிகிறது.

1915 வரையுள்ள கல்வெட்டுக்களை ஒழுங்குபடுத்தி வெளியிட்டுள்ள அரங்காச்சாரியார் நூலின் பகுதி 3 பக்கம் 1475-1476ல் பின் வரும் விவரங்கள் காணப்பெறுகின்றன.

302. சங்கரலிங்கசுவாமி கோவிலிலுள்ள கோமதியம்மன் கோவில் வடக்குச் சுவரில் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரி மெய்கொண்டான் குலசேகர தேவன் என்ற பாண்டியன் சடில வர்மன் தன் மூன்றாவது ஆண்டில் பிரமாதி சகம் 1475-ல் பதித்த கல்வெட்டு. இதில் ஆரிய நாடு குறிக்கப் பெறுகிறது. 1908ல் எடுத்த 281-வது கல்வெட்டு.

303. கோவிலின் முன்புள்ள ஒரு கல்லில் கலி 4962, சகம் 1783 கொல்லம் 1036-ல் துர்மதியல் ஒரு தாசில்தார் கொடுத்தது குறிக்கப்பெறுகிறது. ( 1908-282)

304. பெரிய கோபுரத்துள் நுழையும் போது வலபுறம் உள்ள கல்வெட்டு விசுவாவசு ஆண்டு வைகாசி 24- வது திங்களன்று எழுதப்பெற்றது. திருவிழா சாவு காலங்களில் நான்கு கீழ் வகுப்பு மக்களின் சிறப்புரிமைகள் குறிப்பிடப்படுகிறது. ( 1914-432)

பின்வரும் பதினொன்றும் மக்கென்சி துரை பதித்த நூலில் உள்ளன என அரங்காச்சாரியார் குறிப்பிடுகிறார்.

1. சங்கரநயினார் கோவிலின் தெற்குப் பக்கத்திலுள்ள கல்மேல் பராக்கிரமபாண்டியன் சகம் 1428-ல் கொடுத்த நிலக்கொடை குறிக்கப்படுகிறது.

2. அர்த்த மண்டபத்தின் தென்பக்கம் கைலாசநாத பட்டருக்கு பராக்கிரம பாண்டியன் தனது ஆட்சி இரண்டாம் ஆண்டில் நாடோறும் உணவுக்காக இரண்டு மாநிலமும் ஒரு வீடும் கொடுத்தது குறிக்கப்பெறுகிறது.

3. சுற்றியுள்ள சுவரில் ஒரு கல்லில் பிலவங்க ஆண்டில் பராக்கிரமபாண்டியனுடைய நிலக்கொடை தெரிகிறது.

4. வடக்குச் சுவாரில் ஒரு கல்லில் பராக்கிரம பாண்டியன் தனது ஆட்சி இரண்டாம் ஆண்டாகிய சகம் 1413ல் சதாசிவ பட்டரென்ற பிராமணருக்கு நிலக்கொடை கொடுத்தது தெரிகிறது.

5. கோபுரத்தின் தெற்குச் சுவரில் சிதைந்துள்ள கல்வெட்டு சர்வசித்து சகம் 1510-ல் அவனது ஆட்சி 26-வது ஆண்டில் எழுதியது. (அரசன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1562-1605 வரை ஆண்டவன்)

6. ஆவுடையம்மன் கோவிலின் வடபக்கமுள்ள ஒரு கல்வெட்டில் குலசேகரன் சகம் 1475 ஆகிய தனது ஆட்சி மூன்றாம் ஆண்டில் கோட்டூர் என்னும் ஊரை அம்மைக்குக் கொடுத்தது.

7. அதே இடத்தில் சிதைந்த கல்வெட்டு சகம் 1484ல் அதே அரசனது பதிமூன்றாவது ஆட்சி ஆண்டில்

8. அம்மை கோவில் வடபக்கமுள்ள கல்லொன்றில் சிதைந்த கல்வெட்டு விக்கிரம தேவனுடைய ஆறாவது ஆண்டு.

9. அதே இடத்தில் தனது ஆட்சி பதினாறாவது ஆண்டில் சகம் 1479ல் கராக்கிரம பாண்டியன் ஊரைக் கொடுத்தது.

10. கோவிலின் தெற்கு வாயிலில் விக்கிரம தேவ பாண்டியன் தனது ஆட்சி ஆறாவது ஆண்டில் கோவில் தானீகர்களுக்கு நிலக்கொடை அளித்தது.

11. அதே இடத்தில் வடபக்கமுள்ள கல் ஒன்றில் அம்மைக்கும் அப்பனுக்கும் திரிபுவனச் சக்கரவர்த்தியின் நிலக்கொடை குறிப்பிடப் பெறுகின்றது.
சரித்திர வரலாறு
கல்​வெட்டு


தச்சநல்லூர் சாமி ​வேதமூர்த்தி மடாலயத்தில் திரு​நெல்​வேலி மாவட்டத்திலுள்ள சில ஆயலத்திருப்பணிகள், அரசர்கள் காலத்​தை விளக்கும் கல்​வெட்டு ஒன்று இருக்கிறது.அதனபடி திருவாளர் கு.நல்ல​பெருமாள் பிள்​ளையவர்களால் எழுதப்​பெற்றுச் ​செந்தமிழ்ச் ​செல்வி பத்தாவது சிலம்பு 500-வது பக்கத்தில் ​வெளி வந்திருக்கிறது. அதில் நமக்கு ​வேண்டிய பகுதி​யை மட்டும் கீ​ழே தருகி​றோம்.

சாலிவாகன சகாப்தம் 945 (கி.பி.1022) ​கொல்லம் 199-ல் மது​ரைப் பாண்டியவரசர், ​சேகரம் உக்கிரபாண்டியவரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாய் உக்கிரங்​கோட்​டையும் ​போட்டு அரசாண்டார். அக்காலத்தில் சங்கரநயினார் ​கோவில் ஆலயம் திருப்பணி உண்டானது. சகாப்தம் 1095 ​கொல்லம் 349-ல் சீவலமாறபாண்டியவரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் ​செய்து திருப்பணியும் கட்டி, பிற்பாடு சங்கரநயினார் ​கோவிலுக்குப் ​போய், ​பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி ​​செய்தார். பிற்பாடு மானூ​ரைப் பிரபலம் பண்ணி​வைத்து ஒரு ​பெரிய குளமும் ​வெட்டினார். இவர் நா​ளையில் கரூர் சித்தர் திரு​நெல்​வேலி முதலிய இடங்க​ளைச் சபித்தது.

உக்கிரபாண்டியர்
உக்கிரபாண்டிய மன்னர் இன்​றைக்குத் ​தொள்ளாயிரத்து நாற்பத்​தொன்று ஆண்டுகளுக்கு முன்னா​லே இக்​கோவி​லைக் கட்டினார் என்பது ​தெரிய வருகிறது.

இம்மன்னர் காலத்தி​லே  கரு​வை நக​ரை ஆண்ட ​கேரரசராகிய பிரகத்துவச பாண்டியரும் இங்​கே பல திருப்பணிகள் ​செய்தார் என்பதும், அவர் மகன் விசய குஞ்சர பாண்டியர் என்பதும், சங்கரநயினார்​கோவில் இருக்கும் இடம் கரு​வை நகர்க் ​கோவிலுக்கு நந்தவனமாக இருந்த​தென்பதும் புராணத்தால் அறியும் வரலாறுகள்.

சீவலமாறர்
சீவலமாற பாண்டிய​ரே இத்தலபுராண ஆசிரியர். அவர் இன்​றைக்கு எழுநூற்று ​தொண்ணூறு (790) ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவ​ரென்பதும், அவர் இவ்வூரிற்பலகாலம் தங்கியிருந்தனர் என்பது ​மே​லேகண்ட சாசனத்தாதலும், அவர் ​பெயரால் ஊருக்குத் ​தென் ​மேற்​கே இப்​போது உ​டை குளமாக உள்ள சீவலப்​பேரி என்ற குளத்தினாலும், கிழக்​கே இரண்டு ​மைலுக்குள் உள்ள சீவலராயன்ஏந்தல் என்ற ஊராலும் நி​லைநாட்டப்​பெறும். இவர் ​பெயர் கங்​கை​கொண்டான் மானூர், ​தென்காசி, சீவலப்​பேரி ஆகிய தலங்களிலும் சம்பந்தப்படுகிறது.

கோமதியம்​மை திருமுன்பு சக்கரம்
இன்​றைக்கு ஒரு நூற்றி எண்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிபி,1785-ல் இ​றைவர் திருடிய​டைந்த ​பெரியாராகிய மாபாடியம் சிவஞான முனிவர் சிறு பிள்​ளையாக இருக்கும்​போது திருவாவடுது​றையிற் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் ​வேலப்ப​தேசிகராவர். அவர் இ​றைவர் திருவடிக்கு ​மெய்யன்பராதலினா​லே அவரிடம் குட்டம், குன்மம் முதலிய நீங்கா ​நோய்க​ளையும் ​போக்கும் அருட்சக்தி பதிந்து விளங்கியது.
வேலப்ப​தேசிகமூர்த்திகள் ​கோமதியம்​மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்​தைப் பதித்திருளினார். அசசக்கரத்துக்குக் ​கோமதியம்​மை தந்தருளிய வல்ல​மையினா​லே இன்னும் அதனருகில் வரும் ஆடாத ​பேயும் ஆடுகின்றது. தீராத ​நோயும் தீர்ந்து ​போகின்றது. இந்தத் ​தேசிகமூர்த்திகள் சங்கரன் ​கோவிலி​லே வழிபாடியற்றி இருக்கும் ​போது ஒரு புரட்டாசி மாதமூல நாளி​லே சங்கரனார் திருவடியி​ணைமலர் ​​சேர்ந்து ​பேரின்பம் எய்தினார்.

   
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள