செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   
கலை சிறப்பு
 

சங்கரனார் திருக்கோவிலின் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய கோபுரம் இருக்கிறது. இது ஒன்பது நிலையுடையது. கோபுரத்தின் உச்சி தென்வடல் நீளம் ஐம்பத்தாறு அடி, கீழ்மேல் அகலம் பதினைந்து அடி. உச்சியிலுள்ள குடம் ஏழடி நான்கு அங்குலம் உயரம் இருக்கிறது.

பல மைல்களுக்கு அப்பால் வரும்போதே இக்கோபுரம் தெரியும். ஆதனால் இவ்வூரை நோக்கி வருபவர் யாவரும் நெடுந்தூரத்திலிருந்தே சங்கரலிங்கப் பெருமானையும் கோமதியம்மையையும் நினைத்துக் கொண்டு அன்பு நிறைந்த மனத்துடன் வருகிறார்கள்.

கல்லாலாகிய கோமதியம்மை திருவுருவம் பார்க்க்கப் பார்க்க உள்ளத்தைக் கவரும் காட்சியதென்று முன் கூறப்பட்டது. கல்லாலாகிய கூத்துடைப் பெருமான், திருவுருவமும், சிவகாமியம்மையார் திருவுருவமும், காலைக்காலம்மையார் திருவுருவமும், அவருடைய அம்பலத்தின் முன் நின்று காண்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் பேரழகுடையன.

பழங்காலப் பாண்டியர்களாற் கட்டப்பட்ட மண்டபங்களும் அவைகளிலுள்ள மன்மதன், இரதி, காப்பறையன் சிலைகளுள்ள தூண்களும் பார்க்கத் தக்கன.

திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளைனவர்கள் இக்கோவிலிலே, கோமதியம்மை கொடிமர மண்டபம், அம்பலம், கோபுரம், களஞ்சியம், மடைப்பள்ளி, மணி மதில் தேர், தேர் மண்டபம், நிருதித் திக்கு மண்டபம், மேலைவீதித் திருமடம், பூங்காவனம், தெப்பக்குளம், மணி மண்டபம், கைலாய வாகனம், சிங்க வாகனம், பூத வாகனம், அம்மைக்கு அரதன் அங்கி இவை அமைத்ததோடு அறுபத்து மூவரையும் வகுத்தமைத்தனர் என்பது சங்கரலிங்கர் உலா என்ற நூலிலே கூறப்பெறுகிறது. இவர் கொடிமர மண்டபத் தூண்கள் ஒன்றில் கல்லுருவமாக நின்று சங்கரலிங்கரை இன்றும் வணங்கிக் கொண்டிருக்கிறார்.

நூல்நி​லையம்

சரஸ்வதி மஹால் என்ற நூல் நி​லையம் 27-7-1941-ல் அறநி​லையப் பாதுகாப்புக் கழக ஆ​ணையாளர் இராவ் பகதூர் ​கோ.ம.இராமச்சந்திரன் ​செட்டியார் பி.ஏ.,பி.எல்., அவர்களால் திறந்து ​வைக்கப்​பெற்ற ஓழுங்காக ந​டை​பெற்று வருகிறது. நி​லையத்திலிருக்கும் புத்தகங்களின் எண்.1245.

   
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள