செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   
இலக்கிய சிறப்பு
 

இவ்வூர் தலபுராணம் சீவலமாற பாண்டிய மன்னவரால் அருளிச் செய்யப் பெற்றது. முதலாறு சருகங்கள் ஊற்றுமலைச் சமஸ்தான வித்துவான் புளியங்குடி முத்து வீரப்பக் கவிராயரால் கி.பி. 113-ல் இயற்றப்பெற்றவை. இப்புராணத்துக்கு அரும்பதவுரையும் சுருக்கமும் எழுதியவர் சேற்றூர் மு.ரா.அருணாசலக் கவிராயராவார்.

மதுரை நீ. இராமலிங்கம் பிள்ளையென்பார் “ சங்கரநயினார் கோவில் கோமதியம்மன் தவ மகிமை அம்மமனை* என ஓர் நூல் இயற்றியிருக்கின்றார். பூகைலாய மான்மியம் என்கிற சங்கரநாராயண ஷேத்ர மான்மியம். ஏன்ற வடமொழி நூல் தமிழ் மொரிபெயர்ப்புடன் 1919ல் அச்சிடப் பெற்றிருக்கின்றது.

சங்கரநயினார் கோவில் சங்கரலிங்கர் உலா, சங்கரநயினார் கோவில் அந்தாதி சங்கரலிங்கர் சதகம், கோமதியம்மை பிள்ளைத்தமிழ், சதாசிவமாலை சங்கரநயினார் கோவில் கோமதியம்மை தவ மகிமை அம்மானை முதலிய பல நூல்கள் விளக்குகின்றன. முத்து வீரப்பக் கவிராயராலே பிள்ளைத் தமிழ் பாடப்பெற்றது.

   
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள