செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   
தீர்த்தங்கள்
 

இங்கே ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கௌரி தீர்த்தம் என்பன. சங்கரலிங்கத்திற்கு நிருதி திக்கில் சங்கர தீர்த்தம் உள்ளது. அது இந்திர தீர்த்தமென்றும் பெயர் பெறும். சங்கன், பதுமன் என்னும் பம்பரசர்களால் முழுகப் பெற்றதும், அவர்களால் நன்றாகத் தோண்டப் பெற்றதுமாகிய நாகசுனை கோவிலுக்குள்ளே நுழையும் இடத்தில் கோமதியம்மை திருமுன்பு அழகானதோர் நடு மண்டபத்தோடு விளங்குகிறது.

காற்றை புசிக்கின்ற சர்ப்பங்களாலே செய்யப்பட்ட காரணத்தால் இத்தீர்த்தத்தில் நண்டு, ஆமை, தவளை, மீன் முதலிய நீர்வாழுமுயிர்களில்லை. ஊருக்குத் தென்பக்கம் உள்ளது ஆவுடைப்பொய்கை என்பது, இதில் தெப்பத் திருவிழா, தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று நடைபெறும்.

இந்திரனுக்குத் துன்பம் விளைவித்த மாயாசுரனைத் தொலைக்கக் கோமதியம்மையால் ஏவப்பட்ட மாயை திக்கில் மலையாக இருந்தது.

அம்மலையின் வடக்கே தண்டத்தால் ஊன்றப் பெற்றுத் தோன்றிய கண்ட தீர்த்தமும், தெற்கில் பசுக்களைக் காப்பாற்ற உண்டாக்கப் பெற்ற தேனு தீர்த்தமும் உள்ளன.
   
 
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள