செய்திகள்
>> ஆடி தபசு விழா - மண்டகப்படி 3ம் நாள்      >> ஐப்பசி திருக்கல்யாணம்      >> சித்திரை பிரம்மோற்சவம்
 
 
   
அருள்மிகு சங்கரலிங்க சுவாமி
பூஜாக்காலம்
 
திருவனந்தல் 6.00 am
   
விளாபூசை 6.30 am
சிறு காலசந்தி 8.30 am
காலசந்தி 10.30 am
உச்சிகாலம் 12.30 pm
சாயரட்சை 5.30 pm
அர்த்தசாமம் 9.00 pm
வழிபாட்டு நேரம்

காலை 5.30 முதல் நண்பகல் 12.15 வரை       மாலை 4.00 முதல் 9.30 வரை

தொடர்பு கொள்ள
துணை ஆணையர் / நிர்வாக அதிகாரி
அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில்,
சங்கரன்கோவில் - 627 756
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
Email Id: sankarankoil@tnhrce.org
தொலைபேசி எண்கள். 04636 – 222265
 
காட்சித் தொகுப்பு
 

சங்கரன்கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் ஆண்டு வந்த ஆண்ட உக்கிர பாண்டியன் மதுரைக்கு அருள்மிகு சோமசுந்தரக் கடவுளைத் தரிசிக்கச் சென்றான். அவனது பட்டத்து யானை, பேருங்கோட்டூர் இடத்தில் தந்தத்தால் குத்தி மண் மீது பாய்ந்தது.

அரசன் திகைத்தான். புன்னை வனச் சோலையின் காவல்காரன் மணிக்கிரீவன், சோலையில் புற்று ஒன்று என்றும் அதனை வெட்டும் போது ஒரு நாகப்பாம்பின் மீது வெட்டப்பட, அதன் வால்அறுந்து விட்டது என்றும், இரத்தம் பீறிட்டது என்றும் கூறினான்.

அரசன் புன்னைவனச் சோலையை அகழ்ந்திட ஆணையிட, மக்கள் அகழும் போது அங்கு சிவலிங்கத்தைக் கண்டனர். மன்னனும், மக்களும் வியப்பும், மகிழ்வும் கொண்டனர். அரசன் சுவாமிக்குக் காட்டைத் திருத்தி திருக்கோயில் எடுப்பித்தான். திருச்சுற்று மாளிகையும், கோபுரமும் அமைத்தான்.

அத்தகு சிறப்பு வாய்ந்த பெருமானே சங்கரலிங்கர் எனும் நாமத்தோடு மக்களுக்கு மிகுந்த வரப்ரசாதியாய் அருள்பாலித்து வருகின்றார் . மணிக்கிரீவன் சிலை கூட இன்றும் கோயிலில் உள்ளது. உக்கிர பாண்டியன் சிலையும் உள்ளது.

     
     
 
  மேலும் பார்வையிட...  
 
 
 
  முகப்பு தெய்வங்கள் வரலாறு திருக்கோவில் திருவிழாக்கள் சேவைகள் காட்சித் தொகுப்பு தொடர்பு கொள்ள